Wednesday, May 23, 2007

ம(ற)றைந்து போன விளையாட்டுக்கள்....

ம(ற)றைந்து போன விளையாட்டுக்கள்....

சமீபத்தில் ஒரு விளம்பரம் பார்த்தேன். அதில் விளையாட வேண்டிய சிறுவர்கள், உள்ளே அமர்ந்து 'Video Game' விளையாடுவார்கள். ஆனால் உள்ளே அமர வேண்டிய தாத்தாக்களோ தெருவில் விளையாடுவார்கள். நமது பாரம்பரிய விளையாடு என்ன ஆனது? அது மறக்க பட்டதா? இதற்கு என்ன காரணம்? யார் காரணம் என்ன? இதனால் ஏற்படும் விளைவுகள்? என்ற என் கேள்வியின் பதிலாக விளைந்ததே இந்த பதிவு (அ) கட்டுரை.

முதலில் 20 வருடத்திற்கு முன் நாம் விளையாடிய விளையாட்டு என்ன, அதன் பயன் என்ன, எப்படி விளையாடுவது என்று பார்ப்போம்.

உள் அரங்கு விளையாட்டு.
1. ஆடுபுலியாட்டம் - ஒரு கட்டம் போடப்படும். மூன்று புலிகள். பதினைந்து ஆடுகள். புலி அனைத்து ஆடுகளையும் கொன்றதா? ஆடு புலிகளை மடக்கியதா? என்பதே விளையாடு. - புத்தி கூர்மை அடையும்.

2. உள்ளூர் சதுரங்கம் - ஒரு சதுரத்திற்குள் குறுக்கும் நெடுக்குமாக நான்கு கோடுகள் போடப்படும். ஆளுக்கு மூன்று காய்கள் கொடுக்கப்படும். மூன்றையும் நேர்கோட்டில் கொண்டு வர வேண்டும். - புத்தி கூர்மை அடையும்.

3. தாயம் - ஆறுக்கு ஆறு, என்று சதுரம் வரைந்து விளையாடும் ஆட்டம் - சூதாட்டம், பயனில்லை.

4. பாம்பு தாயம் - விளக்கம் தேவையில்லை - சூதாட்டம், பயனில்லை.

5. சீட்டு கட்டு - அனைத்து சீட்டுகளும் தலை கீழாக போடப்படும். ஜோடியாக எடுத்தால் வைத்து கொள்ளலாம். யார் அதிக ஜோடி எடுக்கிறாரோ அவருக்கே வெற்றி. - ஞாபக சக்தி வளரும்.

வெளி அரங்கு விளையாட்டு.
1. செதுக்காங்கல் - சிகரெட் அட்டை ஒரு வட்டத்திற்குள் போடப்படும். கல் மூலம் அதை வெளியே கொண்டு வர வேண்டும். - அட்டைகளை எண்ணுவதால் கணிதம் நன்றாக வரும்.

2. செவன் ஷ்டோன் - ஏழு கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்க வேண்டும். பந்தை வைத்து அதை குழைக்க வேண்டும். குழைத்த பின் வரிசையாக அடுக்க வேண்டும். அடுக்குவதற்குள், எதிராளி பந்தால் நம்மை அடித்து விட்டால், அவனுக்கு 1 பாயிண்ட். நாம் அடுக்கிவிட்டால் நமக்கு 1 பாயிண்ட் - குழுவேலை நன்றாக வளரும். ஒடுவதால் உடல் வழுவாகும்.

3. கண்ணாம்மூச்சி - கண்களை கட்டிகொண்டு எதிராளியை தொட வேண்டும். - கண்களை கட்டி கொள்வதால், செவித்திறன் வளரும். உற்று கவனிக்கும் திறன் அதிகரிக்கும்.

4. கல்லா? தரையா? - இதில் பட்டு வருபவர் (Cஅட்செர்) கல் அல்லது மண் தேர்ந்தெடுக்க வேண்டும். மண்ணை தேர்ந்தெடுத்தால், மண்ணில் இருப்பவரை அவர் தொட்டால் அவர் ஓஉட். அவர் பட்டு வர வேண்டும்.

மொத்தத்தில் நமது பழைய விளையாட்டை விளையாடினால், உடல் மட்டுமல்ல மனமும் வழுவாகும். தோல்வி கண்டு துவளா மனம் உண்டாகும். மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதால் அவர்களுக்கு குழுவேலை நன்றாக வளரும். மற்ற ஊர் குழந்தைகளுடன் விளையாடுவதால் கலாச்சார பரிமாற்றம் ஏற்ப்பட வாய்ப்புகள் அதிகம்.

இத்தகைய விளையாட்டை இக்கால குழந்தைகள் ஏன் விளையாடுவதில்லை என்ற கேள்விக்கு பல பதில்கள் கிடைத்தன.

முதலவதாக விளையாட நேரம் இல்லை. கணினி வகுப்பு, நீச்சல் வகுப்பு, ஹிந்தி வகுப்பு, அபேகஷ் என்று அவர்களுக்கு ஒரு நாளுக்கு 24 மணி நேரம் படிக்கவே போதவில்லை.

இரண்டவதாக அந்த விளையாட்டை கற்றுக் கொடுக்க தாய் - தந்தைக்கு நேரம் இல்லை.

மூன்றவதாக பழைய விளையாட்டு என்று ஒதுக்கிவிடுகின்றனர். 'என் அப்பா விளையாடிய விளையாட்டு இதை யாருடா விளையாடுவார்கள்?' என்று விளையாடுவதை அவமானமாக கருதுகின்றனர்.

மிக முக்கியமான காரணம் - கணினி விளையாட்டு. இது விளையாடினால், குழந்தைகளுக்கு சோறு, தண்ணீர், அம்மா என்று எதுவும் வேண்டாம்.

வருடம் முழுவதும் படிப்பை பற்றி மட்டுமே யோசிக்கும் குழந்தைகளுக்கு, கோடை விடுமுறையே சொர்க்கம் ஆகும். நன்றாக ஒடி விளையாடி அவர்களை புதுப்பித்து கொண்டால்தான், அவர்களால் அடுத்த வருடத்தையும் புத்துணர்ச்சியுடன் எதிர்கொள்ள முடியும். நமது கனவுகள், நமது நாட்டை தாங்கி பிடிக்க போகும் குழந்தைகள் அறிவில் மட்டும் சிறந்தவர்களாக இருந்தால் போதாது. மனபலம், உடல் பலம் படைத்தவர்களாக இருக்க வேண்டும்.

இவ்விரண்டையும் வழங்கும் பழைய விளையாட்டுகள் நம் குழந்தைகள் விளையாட காண்போமாக!!!

Monday, May 21, 2007

நீ நீயாக இரு !!!

மற்றவரிடம்
இருந்து
தன்னை
வித்தியாசப்படுத்த
நினைக்கும்
மனிதா !!

நீ
நீயாக
இருந்தாலே
வித்தியாசப்படுவாய்
என்பதை
உண்ர்வாயா???

Sunday, May 20, 2007

இளமையை உணர...

புதிதாய் கல்.
காதலை காதலி.
அன்பை உணர்.
இசையை ரசி.
நண்பனை யோசி.
குழந்தையை முத்தமிடு.
இயற்கையை நேசி.
நிலவுடன் விளையாடு.
பொறாமை குறை.
கனவை உண்.

நீயும் மார்க்கண்டேயேனே !!!

Friday, May 18, 2007

நான் சந்தித்த பெண்கள் - பள்ளிப்பருவம்.

விகடனில் பிரகாஷ்ராஜ் தான் நேசித்த பெண்களை பற்றி எழுதி இருந்தார். நான் வாழ்வில் சந்தித்த பெண்களை பற்றி எழுதலாமே என்று தோன்றிய உணர்வின் வெளிப்பாடுதான் இந்த பதிவு.

நான் சந்தித்த பெண்களை மூன்று வகையாக பிரித்துள்ளேன். பள்ளிபருவத்தில் சந்தித்தவர்கள், கல்லூரியில் சந்தித்தவர்கள், வேலை கிடைத்தபின் சந்தித்தவர்கள். தற்சமயம் அவர்களை நான் சந்திக்க நேர்ந்தால் கேட்க விரும்பும் கேள்வியையும் சேர்த்துள்ளேன்.

முதலாம் பெண்: - பால்கோவா.
இவளை நான் சந்தித்த போது எனக்கு வயது 6. பள்ளியிலிருந்து என் பாட்டி வீட்டுக்கு செல்லும் வழியில் பார்ப்பேன். பெயர் தெரியாது. அவளுக்கு அவளது பாட்டி பால்கோவா ஊட்டி விடுவாள். எனக்கு பால்கோவா பிடிக்கும் என்பதால் அவளையும் பிடித்தது.

கேள்வி: இன்னும் பால்கோவா விரும்பி சாப்பிடுறியா?

இரண்டாம் பெண்- சிவகாமி.
இவளை நான் சந்தித்த போது எனக்கு வயது 14. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது NTSE பயிற்சி வகுப்புக்கு செல்வேன். அப்பொழுது சந்தித்தவள் இவள். அமைதியானவள். ஒரே இடத்தை உற்று நோக்கும் வழக்கம் கொண்டவள். அவள் பார்க்கும் பக்கமா நான் அமர வேண்டும்? நண்பர்களின் கேலிக்கு ஆளானேன். நல்ல வேளையாக நானும், அவளும் (NTSE) தேர்வாக இல்லை. பின்ன என்ன? இரண்டாம் நிலையுலும் யார் கேவலப்படுவது?? இவளை பார்த்த பின் தான் நான் என்னை காண ஆரம்பித்தேன். அழகாக உணர்ந்தேன். என் மனது எனக்கு மட்டும் சொந்தம் இல்லை என்று உணர்ந்த பருவம் இது. விளைவு- பத்தாம் வகுப்பில் மதிப்பெண் குறைவு.

கேள்வி: அவ்வளவு பெரிய வகுப்பில் உனக்கு பார்க்க வேறு இடம் இல்லையா?

மூன்றாம் பெண்: பூ.
இவளை நான் சந்தித்த போது எனக்கு வயது 16. பெயருக்கு ஏத்தது போல் பூ மழை பொழிபவள். இரு அண்ணன்கள் இவளுக்கு இருந்தால் இவளிடம் பேச கொஞ்சம் பயம் எனக்கு. ஆனாலும், இவள் அண்ணன்களிடம் நல்ல பெயர் வாங்கி இருந்தேன். சற்று தள்ளி எதிர் வீட்டில் இருந்ததால், சமயத்தில் எதிர்படும்போது 'புன்னகை' பூ பரிசாக கொடுப்பாள்.

கேள்வி: உனக்கு இரு அண்ணன்கள் இருக்கும்போது என்னை ஏன் 'அண்ணன்' என்று அழைத்தாய்?

நான்காம் பெண்: என் பெயர் கொண்டவள்.

இவளை நான் சந்தித்த போது எனக்கு வயது 17. கறுப்புதான். ஆனால், கண்ணை கவரும் கறுப்பு. பன்னிரெண்டாம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தினமலரில் வரும். தினமலரை அவர்கள் வாங்குவார்கள். அவர்களிடம் இரவல் வாங்க செல்வேன். படம் வரைய தெரியாததால்,(பாடம் மட்டும் நல்லா வருமோ??) அவளிடம் வரைய சொல்லி கேட்பேன். அவளும், நான் வரைவதை விட மிக மோசமாக வரைந்து கொடுப்பாள். என் நடததை பார்த்த என் அம்மாவிற்கு பயமிருந்தால், 'அக்கா, நல்லா வரைகிறாள், இல்ல?' என்று வெறுப்பு ஏற்றுவார்கள். கடைசியில் பூவின்(மூன்றாம் பெண்) அண்ணனை காதல் திருமணம் செய்து கொண்டாள்.

கேள்வி: உள்ளங்கையில் வைத்து கொண்டாடிய உன் குடும்பத்தை மறந்து, எப்படி 'காதல்' திருமணம் செய்து கொள்ள மனம் வந்தது?

இந்த முறை ஏமாறததால், +2வில் நல்ல மதிப்பெண் பெற்று நல்ல பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன்.

தமிழ் திரைப்படம் பார்த்து கெட்ட பலரில் நானும் ஒருவன். கல்லூரி கற்க அல்ல, காதலிக்க என்ற தப்பான எண்ணத்துடன் சென்றேன்.

நான் சந்தித்த பெண்கள் - கல்லூரி பருவம் - அடுத்த பதிவில்....

Wednesday, May 16, 2007

வயதுக்கு வந்த நான்...

12 வயதில் சுயமாய் முடிவு எடுக்கும்,
அறிவை கல்வி வழங்கும் போது,

15 வயதில் தந்தை ஆகும் தகுதியை
இயற்கையே எனக்கு தரும்போது,

18 வயதில் நாட்டின் தலைவனை
தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கும்போது,

21 என்று எனது திருமண வயதை,
தீர்மானிக்க இந்த அரசாங்கம் யார்???

அகரம்.

என் கல்லூரி தோழியின் உணர்வு இது. அதை வெளிப்படுத்த கவிதை எழுதினேனே தவிர, இதில் எனக்கு உடன்பாடு இல்லைதான்.

என் மணாளன்,

றிவானவனாக,
ழகானவனாக,
ன்புள்ளவனாக,
வசியமில்லை.
யல்நாட்டு மோகம்,
ற்றவனாக் இருக்க வேண்டும். பிழைப்புக்காக,
ன்னை நாட்டை விட்டு,
ண்டை நாட்டுக்கு பறந்தவன், நாளை
ன்னத்திற்காக தன்னை
டுத்தவனுக்கு விற்கமாட்டான் என்று
றுதியிட்டு எப்படி கூற முடியும்?

இறைவன் கொடியவனே !!!

வேண்டியவைகளை தராமல்,
தேவையானவற்றை கொடுக்கும்,
இறைவன் கொடியவனே !!!

Friday, May 11, 2007

கவிதை எழுதிய கவிதை.

காதல் தந்த எனக்கு,
கவிதை தா என்றேன் நான்.

'கவிஞனுக்கே கவிதையா??
இந்தா வைச்சுக்கோ..'
என்று எழுத ஆரம்பித்தாய்.

கண்களை மூடி ஒரு அழகிய
மௌனக்கவிதை எழுதினாய் !!

பேனா பின்னாலிருந்த மூடி கடித்து,
கவிதை எழுதினாய் !!

உதடு கடித்து அழகாய்,
உதட்டு கவிதை எழுதினாய் !!

'முடியலைடா' என்று சிணுங்கி,
முழுக்கவிதை எழுதி முடித்தாய் !!

Wednesday, May 9, 2007

பதிலாக என் புன்னகை...

'காதல் தோல்வி' பற்றி,
எழுதிய கவிதையை
பார்த்து,

"சுந்தரியை நீ மறக்கலையா??"
வினவினான் என்
பள்ளி பருவத்து தோழன்.

"கண்டிப்பா இது கன்யா பற்றியது.."
கருத்து சொன்னான்
கல்லூரி நண்பன்.

"யாருடா? நம்ம சோன்யாதானே?"
ஆச்சரியத்துடன் கேட்டான்,
அலுவலக கூட்டாளி.

'என் தூய நட்பை புரிந்து கொள்ள, யாரும் இல்லையா??'என்று நினைத்துகொண்டு,
பதிலாக அளித்தேன், என் புன்னகையை.... :-)