Monday, August 27, 2007

எனது விழிகள் !!

அநாயசமான வளைவை அழகாய் ரசித்து
அளந்து பார்த்தன எனது விழிகள் !!
தாய்மைக்கு அடையாளமாய் இறை தந்த
தனத்தை தரிசித்தன எனது விழிகள் !!
கண் காண வேண்டிய கண்களை தவிர
கண்டதையும் கண்டன எனது விழிகள் !!
பண்ணிய பாவத்திற்காக கடைசியாக மின்னல்-ஒளி
பார்த்து மடிந்தன எனது விழிகள் !!

Thursday, August 9, 2007

என்னை போல் ஒருவன்.

அவனை கண்டேன். என்னை போல் உள்ளான். என் கண் கருநீலம், அவனுக்கு அடர் கறுப்பு. மூக்கு கொஞ்சம் நீளம். மற்றபடி மீசை சேர்த்து, கிர்தா வைத்தால், என் தாயால் கூட இருவரில் நான் யார் என்று கண்டுபிடிக்க முடியாது.

அப்பா தொழிலேயே செய்யும் அடி முட்டாள் ஆனாலும், அதை விருத்தி செய்யும் நோக்குடன் காங்காங் வந்த இடத்தில் இப்படி ஒரு அதிர்ச்சியா?? . தமிழ் முகங்களேயே காண முடியாத இந்த ஊரில் என் போல் ஒருவனா??

அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அவனே என்னிடம் வந்து பேசினான். காபி சாப் சென்றோம். காபி அருந்தும்போதே ஒருவரை பற்றி ஒருவர் விசாரித்து கொண்டோம். அவனுக்கும் பூர்விகம் தமிழ் நாடுதானாம். என்னை விட ஒரு பத்து மாதம் மூத்தவன். அப்படியென்றால், "நான் கருவில் இருக்கும்போது ஆசையை அடக்க முடியாதவரா என் தந்தை?" என்ற கேள்வி தோன்றியது. "என் குடும்பத்தில் நான் தானே முதன்முதலில் வெளிநாடு வந்தது" என்ற பதில் அந்த கேள்விக்கு பதிலாக அமைந்தது.

வேலை இருக்கு என்று சொல்லி கிளம்பியவனை நிறுத்தி கேட்டேன் "ஏன்?" என்று.

அவன் சொன்ன பதில் கேட்டு மானசீகமாக தந்தையிடம் மன்னிப்பு கேட்டேன். ஊருக்கு சென்றவுடன் என் குடும்பத்திடம் இது பற்றி சொல்ல வேண்டும் என்பதற்க்காக அவனுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

அவன் சொன்ன பதில் - பிளாஷ்டிக் சர்ஜரி.

Friday, August 3, 2007

கதிரவனிடம் ஒரு கணை.

Kathiravan

முன்னாள் காதலி போல, உன்னிடம் விடை வராது
என்றுணர்ந்தும் வினவுகிறேன் கதிரவா!
காலையில் கனல் கக்கும் உனக்கும், மாலையில்
மனம் வருடும் சந்திரனுக்கும் என்ன உறவு?
பகலில் பழுக்க காய்ச்சிய பூமியை குளிர்விக்க
வந்த பெண்ணிலவின் ஆண் உருவமா நீ?
காத்திருந்து கடுங்கோபங்கொண்டு கண் சிவந்து
கடக்கும் காதலன் கதிரவனா நீ?
நள்ளிரவில் நட்சத்திரங்களுடன் நாடு கடந்த
தங்கையை தேடும் அண்ணன் ஆதவனா நீ?
மாதத்தில் முதல் பாதி பூரித்து மறுபாதி மெலியும்,
வெண்ணிலவின் கணவன் கதிரவனா நீ?