Saturday, February 24, 2007

கடலை போட காரணம்.

திடீரென்று தோன்றிய உளறல்...

"நான் மற்ற பெண்ணுடன் பேசும்போது,
நீ கோபப்படும் அழகை ரசிக்க மட்டுமே,
நான் கடலை போடுகிறேன்..."

Friday, February 23, 2007

என்னை பாதித்த நண்பர்கள்..

எனது நண்பர்கள் பற்றி எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் ஒருவரை பற்றி கூறி மற்றவரை மறந்து விட்டால் தவறு என்பதால், என்னை பாதித்த நண்பர்கள் பற்றி எழுத உள்ளேன். ஒரு குழந்தை சிரிக்கும் பொழுது யாரையும் தேடாது. ஆனால் அதே குழந்தை அழும் பொழுது அதன் தாயை தவிர வேறு எதையும் தேடாது. அது போல், நானும் யாருடனும் இருந்தாலும் சிரிப்பேன். அதே நேரம், அழ வேண்டுமென்றால், இவர்களின் தோளை மட்டுமே தேடுவேன். தோள் கொடுக்கும் தோழர்கள் அல்லவா???

'உன் நண்பர்களை காட்டு. உன்னை பற்றி சொல்கிறேன். ' - என்பது பழமொழி. இவர்களை காட்டுகிறேன், என்னை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

முதலாமவன். இவன் பெயரும் எனது பெயரும் ஒன்றே. எனது உயிர் எடுக்க, கொடுக்க வந்தவன். எனது கல்லூரி நண்பன். எட்டு வருட பழக்கம். நாங்கள் பார்த்துக்கொள்ளாத நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எனது எண்ணமும், இவனது எண்ணமும் முற்றிலும் மாறுபட்டது. ஆனாலும், எங்கள் இருவருக்கும் நட்பு இருப்பதற்க்கு காரணம், நாங்கள் இருவரும் சிறு வயதிலேயே பெரிய துக்கத்தை அனுபவித்தவர்கள். என் மனதில் என்ன நினைக்கிறேன், என்பதை அச்சு அசலாக கண்டுபிடிப்பதில் கை தேர்ந்தவன். உன்னை இழக்கிறேன், நண்பா !!!

இரண்டாமவன். இவன் ஒரு மருத்துவன். என்னையும் ஒரு பெண்ணையும் சேர்த்து முதன்முதலில் ஒட்டியவன். தற்சமயம் திருமணம் முடிந்து விட்டது. பன்னிரெண்டாம் வகுப்பில் தொடங்கிய இவனது காதல் இப்பொழுது திருமணத்தில் முடிந்தது. மூன்று வருடங்கள், இரவில் இவனுடன் சேர்ந்துதான் பள்ளியில் இருந்து வீடு திரும்புவோம். கேலி செய்யாத ஆசிரியர் இல்லை. ஆடாத ஆட்டம் இல்லை.

மூன்றாமவன். தற்சமயம், முனைவர் பட்டத்துக்கு படித்து கொண்டிருக்கிறான். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் எனது 'மனசாட்சி'. ஆகையால், இவனுக்கும் எனக்கும் அடிக்கடி சண்டைதான். நான் இவனிடம் தொலைபேசியில் பேசும் கடைசி வார்த்தை, 'நான் இனி உன்னை அழைக்க மாட்டேன்.' இரண்டு நாள் கழித்து மறுபடியும் பேசுவோம். சண்டை தொடரும். எனது மனதிற்கு எது சரி என்று படுகிறதோ, அதையே இவனும் சொல்வதால், இவனை ரசிப்பேன். நாங்கள் கடவுள் முதல் காமம் வரை விவாதிப்போம். நாங்கள் ஒன்றை பற்றி விவாதிக்கவில்லை என்றால், அது ஒன்று உலகில் இல்லை, அல்லது, எங்களுக்கு அதை பற்றி தெரியவில்லை என்று அர்த்தம்.

நான்கமவன். நெல்லியாண்டவர் பெயர் கொண்டவன். இவனுடன் ஒன்றாக தங்கியுள்ளேன். ஒன்றாக வேலை பார்த்துள்ளேன். இவனிடம், எனக்கு பிடித்தது இவனுடைய பிடிவாதம். என்னை விட பிடிவாதக்காரன். அதே நேரம் கற்றுக்கொள்ளும் ஆசை கொண்டவன். எந்த ஒரு புதிய விஷயமாக இருந்தாலும், மிக விரைவில் கற்றுகொள்வான். இவனுடைய போரட்ட குணம், என்னை மிகவும் கவர்ந்தது.

ஐந்தாமவன். திருவாளர் சோம்பேறி. அழகானவன். அறிவானவன். நான் சின்னவன் என்றால், இவன் பெரியவன். என்னை விட ஒரு வயது மூத்தவன். இவனுக்கு, நேரம், காலம் பற்றியெல்லாம் கவலையில்லை. ஆகவே, இவனுடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது. எனக்காக எதையும் செய்யக்கூடிய நல்ல நண்பன். தற்சமயம், காதல் வலையில் சிக்கிக்கொண்டு வாழ்வை ரசிக்கிறான். இவன் இருந்தாலும் இம்சை, இல்லையென்றால், மகா கொடுமை. இன்னமும் என்னை இம்சைக்க, இங்கு வருகிறான். கடவுள்தான் என்னை இர்ட்சிக்க வேண்டும்.

என் நண்பர்களை பற்றி ஏன் எழுதுகிறேன் என்றால், இப்பொழுது யாரும் என் அருகில் இல்லை. இதில் எழுதினால், அவர்களின் இனிய ஞாபகம் என் மனதை இனிக்க வைக்கும் என்பதால்தான்.

Thursday, February 22, 2007

வல்லவன் - ஓட்டை.

சமீபத்தில் வல்லவன் என்ற திரைப்படம் பார்த்தேன். அதில் ஒரு ஒட்டையை கண்டேன்.

அதில், கதாநாயகன் கோயிலில் கதாநாயகியை பார்ப்பான். அவள் அழகில் மய்ங்கி,கண்டவுடன் காதல் ஆகி விடும். தவறு இல்லை.

ஆனால், அந்த கதாநாயகிக்கு மட்டும் மனதை பார்த்துதான் காதல் வரணுமாம். அதற்காக வேஷம் எல்லாம் போட்டு செல்வார்.

இது எந்த ஊர் நியாயம்? அவருக்கு மட்டும், அழகை பார்த்து காதலாம். பெண்ணுக்கு மட்டும், மனசை பார்த்து காதல் வரணுமாம். இதனால், அந்த படத்தில் உள்ள மற்ற எதுவும் என்னை கவரவில்லை.

Important Part in Body.

My mother used to ask me what the most important part of the body is?

Through the years I would take a guess at what I thought was the correct answer. When I was younger, I thought sound was very important to us as humans, so I said, "My ears, Mommy." She said, "No. Many people are deaf.

But you keep thinking about it and I will ask you again soon." Several years passed before she asked me again. Since making my first attempt, I had contemplated the correct answer. So this time I told her, "Mommy, sight is very important to everybody, so it must be our eyes."

She looked at me and told me, "You are learning fast, but the answer is not correct because there are many people who are blind." Stumped again, I continued my quest for knowledge and over the years, Mother asked me a couple more times and always her answer was, "No. But you are getting smarter every year, my child."

Then last year, my grandpa died. Everybody was hurt. Everybody was crying. Even my father cried. I remember that especially because it was only the second time I had seen him cry. My Mom looked at me when it was our turn to say our final good-bye to Grandpa.

She asked me, "Do you know the most important body part yet, dear?" I was shocked when she asked me this now. I always thought this was a game between her and me. She saw the confusion on my face and told me, "This question is very important. It shows that you have really lived in your life.

For every body part you gave me in the past, I have told you, you were wrong and I have given you an example why. But today is the day you need to learn this important lesson." She looked down at me as only a mother can. I saw her eyes well up with tears. She said, "My dear, the most important body part is your shoulder."

I asked, "Is it because it holds up my head?" She replied, "No, it is because it can hold the head of a friend or a loved one when they cry. Everybody needs a shoulder to cry on sometime in life, dear. I only hope that you have enough love and friends that you will always have a shoulder to cry on when you need it."

Then and there I knew the most important body part is not a selfish one. It is sympathetic to the pain of others. People will forget what you said...

People will forget what you did ; But people will NEVER forget how you made them feel...

Wednesday, February 21, 2007

திரைக்கண்ணோட்டம் - 'பச்சைக்கிளி முத்துச்சரம்'

இன்று 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படம் பார்த்தேன். அதைப் பற்றி ப்லொக்கில் போடலாம் என்று யோசனை வந்தது. என்னுடைய கண்ணோட்டத்தில் அந்த படம்.

இந்த படத்தில், கதா நாயகனாக வரும் சரத் குமார், மிக இயல்பாக நடித்துள்ளார். பத்து பேரை தூக்கி போடவில்லை. யாரிடமும் சவால் விடவில்லை. அதை பார்ப்பதுற்கே அழகாக இருந்தது. ஒரே ஒரு உருத்தல் என்னவென்றால் அவருக்கு ஜோடியாக ஒரு இளம் கதா நாயகியை நடிக்க வைத்துள்ளனர். அது ஒன்றுதான் பொறுக்க முடியவில்லை.

ஜோதிகா விற்கு, நல்ல வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நன்றாகவே பயன்படுத்தியுள்ளார்.

வில்லனாக வருபவருக்கு டப்பிங் கொடுத்திருந்தாலும் நன்றாகவே நடித்துள்ளார்.

இவர்களை விட பாரட்டிற்குரியவர் இயக்குனர்தான். தெளிவான கதை. மிக தெளிவான திரைக்கதை. அங்கங்கே தென்படும் 'பளிச் பளிச்' வசனங்கள், என பின்னி எடுத்திருக்கிறார் கௌதம். முதல் பாதி, பார்த்தவுடன், 'திருட்டு பயலே' ஞாபகம் வந்தாலும், அவருடைய பாணியில் நன்றாக எடுத்துள்ளார்.

சமீபத்தில் பார்த்த 'தாமிரபரணி', 'தீபாவளி', 'போக்கிரி' யை விட நல்ல படம்.

எல்லோரும் ஒரு தடவை பார்த்து வரக்கூடிய நல்ல திரைப்படம்.
எனக்கு தெரிந்து ஒட்டை இல்லாததனால், 'குட்டு' இல்லாத 'குட்' படம்.

எனது முதல் முயற்சி...

ஒரு காதல் கவிதை எழுதி எனது ப்லொக்கை ஆரம்பிக்கலாம், என்று நினைக்கிறேன்...

"பிறந்த நாள், நண்பர் தின வாழ்த்துக்கள்,அனுப்பும்போது நிமிடத்துக்கு 60 வார்த்தைஅடிக்கும் எனது விரல்கள்,

உனக்கு திருமண வாழ்த்து,அனுப்பும்போது மட்டும் மணிக்கு 1 வார்த்தை,அடிக்கின்றதே, ஏன்??"

சும்மா தோன்றியதை எழுதினேன்.... அவ்வளவுதான்.... மற்றபடி ஒன்றும் இல்லை.

தங்கள் இனிமையான,
மகேஷன்.

Sunday, February 18, 2007

About Me...

Some words about me,

I am Mahesh.R.
My boss will say that i am a software professional.
My mum will say that i am a good boy.
My brother will say that i am a naughty boy.
My boy friends will say that i am a 'Sweet Rascal'.
My dad will say that our origin is Virudhunagar, Tamil Nadu, India.
My girl friends will say that i am charming.

So, totally I am not having any definition of myself.
To be short and sweet, i am 'Appavi' + 'Ada paavi'.

If time permits me, i will blog you, guys and girls,

Urs Sweetly,
Mahesh.R.