Wednesday, February 21, 2007

திரைக்கண்ணோட்டம் - 'பச்சைக்கிளி முத்துச்சரம்'

இன்று 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படம் பார்த்தேன். அதைப் பற்றி ப்லொக்கில் போடலாம் என்று யோசனை வந்தது. என்னுடைய கண்ணோட்டத்தில் அந்த படம்.

இந்த படத்தில், கதா நாயகனாக வரும் சரத் குமார், மிக இயல்பாக நடித்துள்ளார். பத்து பேரை தூக்கி போடவில்லை. யாரிடமும் சவால் விடவில்லை. அதை பார்ப்பதுற்கே அழகாக இருந்தது. ஒரே ஒரு உருத்தல் என்னவென்றால் அவருக்கு ஜோடியாக ஒரு இளம் கதா நாயகியை நடிக்க வைத்துள்ளனர். அது ஒன்றுதான் பொறுக்க முடியவில்லை.

ஜோதிகா விற்கு, நல்ல வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நன்றாகவே பயன்படுத்தியுள்ளார்.

வில்லனாக வருபவருக்கு டப்பிங் கொடுத்திருந்தாலும் நன்றாகவே நடித்துள்ளார்.

இவர்களை விட பாரட்டிற்குரியவர் இயக்குனர்தான். தெளிவான கதை. மிக தெளிவான திரைக்கதை. அங்கங்கே தென்படும் 'பளிச் பளிச்' வசனங்கள், என பின்னி எடுத்திருக்கிறார் கௌதம். முதல் பாதி, பார்த்தவுடன், 'திருட்டு பயலே' ஞாபகம் வந்தாலும், அவருடைய பாணியில் நன்றாக எடுத்துள்ளார்.

சமீபத்தில் பார்த்த 'தாமிரபரணி', 'தீபாவளி', 'போக்கிரி' யை விட நல்ல படம்.

எல்லோரும் ஒரு தடவை பார்த்து வரக்கூடிய நல்ல திரைப்படம்.
எனக்கு தெரிந்து ஒட்டை இல்லாததனால், 'குட்டு' இல்லாத 'குட்' படம்.

5 comments:

RaGhaV said...

super

Rama said...

// super.

தங்கள் வருகைக்கு நன்றி, ராகா..

ராமகுமரன் said...

the vimarsanam of pachaikili is gud

Srinivasan said...

The comments for the movie are good...But Paatchaikli muthutcharam ia a remake of the hollywood movie "Derailed"...and hence you were not able to witness punch dialogues and other stuff which are exclusive for Tamil movies...

nelliyan said...

Thelivaana Kadhai Thelivaana thirai kadhai... Why Because thelivaa copy adichi irukaan andha gowtham B**du. Derailed is much much better than Pachai killi...
Try to watch that movie...
I didn't like Jyothika's over action at the end of the movie...
She has showcased worst villainism...