Wednesday, May 23, 2007

ம(ற)றைந்து போன விளையாட்டுக்கள்....

ம(ற)றைந்து போன விளையாட்டுக்கள்....

சமீபத்தில் ஒரு விளம்பரம் பார்த்தேன். அதில் விளையாட வேண்டிய சிறுவர்கள், உள்ளே அமர்ந்து 'Video Game' விளையாடுவார்கள். ஆனால் உள்ளே அமர வேண்டிய தாத்தாக்களோ தெருவில் விளையாடுவார்கள். நமது பாரம்பரிய விளையாடு என்ன ஆனது? அது மறக்க பட்டதா? இதற்கு என்ன காரணம்? யார் காரணம் என்ன? இதனால் ஏற்படும் விளைவுகள்? என்ற என் கேள்வியின் பதிலாக விளைந்ததே இந்த பதிவு (அ) கட்டுரை.

முதலில் 20 வருடத்திற்கு முன் நாம் விளையாடிய விளையாட்டு என்ன, அதன் பயன் என்ன, எப்படி விளையாடுவது என்று பார்ப்போம்.

உள் அரங்கு விளையாட்டு.
1. ஆடுபுலியாட்டம் - ஒரு கட்டம் போடப்படும். மூன்று புலிகள். பதினைந்து ஆடுகள். புலி அனைத்து ஆடுகளையும் கொன்றதா? ஆடு புலிகளை மடக்கியதா? என்பதே விளையாடு. - புத்தி கூர்மை அடையும்.

2. உள்ளூர் சதுரங்கம் - ஒரு சதுரத்திற்குள் குறுக்கும் நெடுக்குமாக நான்கு கோடுகள் போடப்படும். ஆளுக்கு மூன்று காய்கள் கொடுக்கப்படும். மூன்றையும் நேர்கோட்டில் கொண்டு வர வேண்டும். - புத்தி கூர்மை அடையும்.

3. தாயம் - ஆறுக்கு ஆறு, என்று சதுரம் வரைந்து விளையாடும் ஆட்டம் - சூதாட்டம், பயனில்லை.

4. பாம்பு தாயம் - விளக்கம் தேவையில்லை - சூதாட்டம், பயனில்லை.

5. சீட்டு கட்டு - அனைத்து சீட்டுகளும் தலை கீழாக போடப்படும். ஜோடியாக எடுத்தால் வைத்து கொள்ளலாம். யார் அதிக ஜோடி எடுக்கிறாரோ அவருக்கே வெற்றி. - ஞாபக சக்தி வளரும்.

வெளி அரங்கு விளையாட்டு.
1. செதுக்காங்கல் - சிகரெட் அட்டை ஒரு வட்டத்திற்குள் போடப்படும். கல் மூலம் அதை வெளியே கொண்டு வர வேண்டும். - அட்டைகளை எண்ணுவதால் கணிதம் நன்றாக வரும்.

2. செவன் ஷ்டோன் - ஏழு கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்க வேண்டும். பந்தை வைத்து அதை குழைக்க வேண்டும். குழைத்த பின் வரிசையாக அடுக்க வேண்டும். அடுக்குவதற்குள், எதிராளி பந்தால் நம்மை அடித்து விட்டால், அவனுக்கு 1 பாயிண்ட். நாம் அடுக்கிவிட்டால் நமக்கு 1 பாயிண்ட் - குழுவேலை நன்றாக வளரும். ஒடுவதால் உடல் வழுவாகும்.

3. கண்ணாம்மூச்சி - கண்களை கட்டிகொண்டு எதிராளியை தொட வேண்டும். - கண்களை கட்டி கொள்வதால், செவித்திறன் வளரும். உற்று கவனிக்கும் திறன் அதிகரிக்கும்.

4. கல்லா? தரையா? - இதில் பட்டு வருபவர் (Cஅட்செர்) கல் அல்லது மண் தேர்ந்தெடுக்க வேண்டும். மண்ணை தேர்ந்தெடுத்தால், மண்ணில் இருப்பவரை அவர் தொட்டால் அவர் ஓஉட். அவர் பட்டு வர வேண்டும்.

மொத்தத்தில் நமது பழைய விளையாட்டை விளையாடினால், உடல் மட்டுமல்ல மனமும் வழுவாகும். தோல்வி கண்டு துவளா மனம் உண்டாகும். மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதால் அவர்களுக்கு குழுவேலை நன்றாக வளரும். மற்ற ஊர் குழந்தைகளுடன் விளையாடுவதால் கலாச்சார பரிமாற்றம் ஏற்ப்பட வாய்ப்புகள் அதிகம்.

இத்தகைய விளையாட்டை இக்கால குழந்தைகள் ஏன் விளையாடுவதில்லை என்ற கேள்விக்கு பல பதில்கள் கிடைத்தன.

முதலவதாக விளையாட நேரம் இல்லை. கணினி வகுப்பு, நீச்சல் வகுப்பு, ஹிந்தி வகுப்பு, அபேகஷ் என்று அவர்களுக்கு ஒரு நாளுக்கு 24 மணி நேரம் படிக்கவே போதவில்லை.

இரண்டவதாக அந்த விளையாட்டை கற்றுக் கொடுக்க தாய் - தந்தைக்கு நேரம் இல்லை.

மூன்றவதாக பழைய விளையாட்டு என்று ஒதுக்கிவிடுகின்றனர். 'என் அப்பா விளையாடிய விளையாட்டு இதை யாருடா விளையாடுவார்கள்?' என்று விளையாடுவதை அவமானமாக கருதுகின்றனர்.

மிக முக்கியமான காரணம் - கணினி விளையாட்டு. இது விளையாடினால், குழந்தைகளுக்கு சோறு, தண்ணீர், அம்மா என்று எதுவும் வேண்டாம்.

வருடம் முழுவதும் படிப்பை பற்றி மட்டுமே யோசிக்கும் குழந்தைகளுக்கு, கோடை விடுமுறையே சொர்க்கம் ஆகும். நன்றாக ஒடி விளையாடி அவர்களை புதுப்பித்து கொண்டால்தான், அவர்களால் அடுத்த வருடத்தையும் புத்துணர்ச்சியுடன் எதிர்கொள்ள முடியும். நமது கனவுகள், நமது நாட்டை தாங்கி பிடிக்க போகும் குழந்தைகள் அறிவில் மட்டும் சிறந்தவர்களாக இருந்தால் போதாது. மனபலம், உடல் பலம் படைத்தவர்களாக இருக்க வேண்டும்.

இவ்விரண்டையும் வழங்கும் பழைய விளையாட்டுகள் நம் குழந்தைகள் விளையாட காண்போமாக!!!

2 comments:

மாசிலா said...

நல்ல பதிவு ராமா. உங்கள் ஆதங்கம் நன்றாகவே புரிகிறது. இருந்தாலும் காலம் அதிர்வேகத்தில் மாறிவருகிறது. இப்போதைய காலங்களில் பெற்றோர்களுக்கு மதிப்பு அவ்வளவு கிடையாது. நுகர்வோர் உலகம் ஆகிவிட்ட் இக்காலங்களில் பொருட்களால் மனிதன் சிறைபிடிக்கப் பட்டிருக்கிறான். இப்போது இருக்கும் அனைத்து வித நவீன கால விளையாட்டுகள் மனிதன் மூளையை வளரவிடாமல் குழைந்த பருவத்திலேயா வைத்திருக்கின்றன. ஊடகங்கள் தங்கள் பங்குக்கு மிச்சம் மீதி இருக்கும் நேரத்தையும் விழுங்கி விடுகின்றன. இந்த மாதிரியான சூழ்நிலைகளில் எப்படி நாம் பழைய பண்பாட்டு விளையாட்டுகள் மீது இளசுகளுக்கு ஈடுபாடு கொள்ள வைக்க முடியும்? ஒருவேளை, திருவிழா காலங்களில் அல்லது சங்கங்கள் மூலம் போட்டி மற்றும் பொழுதுபோக்கு முறையில் கற்றுக் கொடுத்து விளையாட வைக்கலாம். எப்படி இருந்தாலும் விருப்பம் இல்லாமல் யாரும் எதையும் கற்றுக் கொள்ள முடியாது. பள்ளிகளில் இதனை ஒரு கட்டாய விளையாட்டு பாடமாக வேண்டுமானால் செய்ய வைக்கலாம்.

சிவபாலன் said...

.......PLS DO NOT PUBLISH....

சற்றுமுன் போட்டியில் கலந்துகொள்ளுவர் ஒவ்வொருவருக்கும் MP3 பாடல்கள் அனுப்புவேன் என்று என் பதிவில் அறிவிருத்திருந்தேன். அதன் படி சில் MP3 பாடல்களை வலை ஏற்றியுள்ளேன்.

அதன் சுட்டிகளை கீழே கொடுத்துள்ளேன். இங்கே சென்று Download செய்துகொள்ளவும்.

நன்றி.

Only Instrument வைத்து இசைக்கப்பட்ட பாடல்கள். ( Like Senthalam poovil - only in instrument)

கர்நாடக சங்கீதம்

நாதஸ்வர இசை

வயலின் இசை

வீணை

சேக்ஸபோன்

மேண்டலின்


http://www.megaupload.com/?d=R38GTCIS - Instrument Songs - 1 to 10

http://www.megaupload.com/?d=518MTMW6 - Instrument Songs - 11 to 20

http://www.megaupload.com/?d=0B9AV6L6 - Instrument Songs - 21 to 30

http://www.megaupload.com/?d=I3CVGML9

http://www.megaupload.com/?d=KOUVTNKT

http://www.megaupload.com/?d=CDZT6X77

http://www.megaupload.com/?d=CDZT6X77