Friday, August 3, 2007

கதிரவனிடம் ஒரு கணை.

Kathiravan

முன்னாள் காதலி போல, உன்னிடம் விடை வராது
என்றுணர்ந்தும் வினவுகிறேன் கதிரவா!
காலையில் கனல் கக்கும் உனக்கும், மாலையில்
மனம் வருடும் சந்திரனுக்கும் என்ன உறவு?
பகலில் பழுக்க காய்ச்சிய பூமியை குளிர்விக்க
வந்த பெண்ணிலவின் ஆண் உருவமா நீ?
காத்திருந்து கடுங்கோபங்கொண்டு கண் சிவந்து
கடக்கும் காதலன் கதிரவனா நீ?
நள்ளிரவில் நட்சத்திரங்களுடன் நாடு கடந்த
தங்கையை தேடும் அண்ணன் ஆதவனா நீ?
மாதத்தில் முதல் பாதி பூரித்து மறுபாதி மெலியும்,
வெண்ணிலவின் கணவன் கதிரவனா நீ?

No comments: