Thursday, August 9, 2007

என்னை போல் ஒருவன்.

அவனை கண்டேன். என்னை போல் உள்ளான். என் கண் கருநீலம், அவனுக்கு அடர் கறுப்பு. மூக்கு கொஞ்சம் நீளம். மற்றபடி மீசை சேர்த்து, கிர்தா வைத்தால், என் தாயால் கூட இருவரில் நான் யார் என்று கண்டுபிடிக்க முடியாது.

அப்பா தொழிலேயே செய்யும் அடி முட்டாள் ஆனாலும், அதை விருத்தி செய்யும் நோக்குடன் காங்காங் வந்த இடத்தில் இப்படி ஒரு அதிர்ச்சியா?? . தமிழ் முகங்களேயே காண முடியாத இந்த ஊரில் என் போல் ஒருவனா??

அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அவனே என்னிடம் வந்து பேசினான். காபி சாப் சென்றோம். காபி அருந்தும்போதே ஒருவரை பற்றி ஒருவர் விசாரித்து கொண்டோம். அவனுக்கும் பூர்விகம் தமிழ் நாடுதானாம். என்னை விட ஒரு பத்து மாதம் மூத்தவன். அப்படியென்றால், "நான் கருவில் இருக்கும்போது ஆசையை அடக்க முடியாதவரா என் தந்தை?" என்ற கேள்வி தோன்றியது. "என் குடும்பத்தில் நான் தானே முதன்முதலில் வெளிநாடு வந்தது" என்ற பதில் அந்த கேள்விக்கு பதிலாக அமைந்தது.

வேலை இருக்கு என்று சொல்லி கிளம்பியவனை நிறுத்தி கேட்டேன் "ஏன்?" என்று.

அவன் சொன்ன பதில் கேட்டு மானசீகமாக தந்தையிடம் மன்னிப்பு கேட்டேன். ஊருக்கு சென்றவுடன் என் குடும்பத்திடம் இது பற்றி சொல்ல வேண்டும் என்பதற்க்காக அவனுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

அவன் சொன்ன பதில் - பிளாஷ்டிக் சர்ஜரி.

1 comment:

சிறில் அலெக்ஸ் said...

**************பின்னூட்டம் பிரசுரிக்க அல்ல.**************

சற்றுமுன் போட்டி வெற்றியாளருக்கு வாழ்த்துக்கள்.

உங்கள் பரிசு காத்துக்கொண்டிருக்கிறது. உங்கள் மின்னஞ்சலிலிருந்து satrumun[at]gmail.com எனும் முகவரிக்கு ஒரு மடல் அனுப்பவும். அதில் உங்கள் பரிசை நீங்களே பெற்றுக்கொள்கிறீர்களா அல்லது கருணைச் செயல்களுக்குத் தர முன்வருகிறீர்களா எனக் குறிப்பிட்டு மேல் விபரங்களையும் அளியுங்கள். உங்கள் பரிசு விபரங்களுக்கு இங்கே சுட்டவும்.

உங்கள் பதிலை எதிர்பார்க்கும்
சற்றுமுன் குழு.