இன்று தாய்மையை போற்றும் அன்னையர் தினம். தாய்மையை பற்றி எழுத ஆசை. உலகில் மிகச்சிறந்தது 'தாய்மை' என்று ஜெய்சங்கர் ஒரு பழைய படத்தில் பாடுவார். 'தாய்மை'யின் தாய் பெண்மை ஆகும். தாய்மை என்பது பெண்மையின் ஒரு அங்கம் ஆகும். பெண்மை ப(போ)ற்றி எழுதினால், அது தாய்மையையும் குறிக்கும். ஆக மொத்தத்தில், பெண்மையை கம்பராமாயணத்தில், வில்லிபாரதத்தில் எப்படி போற்றப்பட்டுள்ளது என்பதை ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.பெண்மையை போற்றி எழுதுவது மட்டுமே என் நோக்கம்.
பெண்மை பற்றி எழுதுவதற்கு, முதலில் எனது குரு வணக்கம் மகாகவிக்கு. பெண்மையை கொண்டாடிய பாரதிக்கே, பெண்மையின் மேன்மையை பற்றி முதலில் விளக்கி புரிய வைத்தவர் நிவேதிதா. நிவேதிதா, பெண்மையை பற்றி பின்வருமாறு பாரதியிடம் கூறி உள்ளார். "சாதி மதம் பிறப்பு காரணமான அநாகரிக வேற்றுமைகளை மறந்து விடு. பெண்மக்களைத் தாழ்வாக நினைக்காதே. மனைவியைக் காமத்துடன் நோக்காதே. மாதர்களை இருட்டில் தள்ளிவிட்டு அவர்கள் அறியாமல் ஆண்கள் மட்டும் மேலான நிலைக்கு ஒருபோதும் வரமுடியாது என்பதை உணர்ந்து கொள்."
முதலில் பெண்-ஆண் பற்றி அறிவோம். இந்து மதத்தில் சக்தி - சிவம் என்ற தத்துவம் உண்டு. இந்த உலகில் இரண்டு தான் உண்டு. ஒன்று பொருள் (Matter), இன்னொன்று இயக்கம் (Energy) ஆகும். நாம் கூட உடல்+உயிர் ஆவோம். உடல் என்பது பொருள் ஆகும், அதை இயக்குவது உயிர் ஆகும். அந்த உயிர் தான் சக்தியாகவும், உடல்தான் சிவமாகவும் கருதப்படுகிறது.
ஒருவர் இறந்த பிறகு, அவருடைய உயிர் (சக்தி) பராசக்தியுடன் இணைகிறது. உயிரில்லாத உடல் (சிவம்), சவமாகும். அந்த சவத்தை சிவன் வாழும் சுடுகாட்டில் எரிக்கப்பட்டு, பரமசிவனுடன் இணைகிறது. இந்து மதத்தின்படி பெண் என்பவள் சக்தி ஆவாள். ஆண் என்பவன் சிவம் ஆவான். ஆண் திறம்பட செயலாற்ற பெண் என்ற சக்தி இன்றியமையாதவளாகிறாள்.
ஒரு ஆடவன் முதலில் நல்ல முறையில் வளர தாய் உந்து சக்தியாயிருக்கிறாள். அவன் சமுதாயாத்தில் நல்ல முறையில் வாழ மனைவி உந்து சக்தியாயிருக்கிறாள். இறக்கும் வரை அவனை அரவணைத்து காக்கும் சக்தியாக மனைவியோ, மகளோ, தாயோ இருக்கிறாள். பிறப்பில் இருந்து இறக்கும் வரை செயலாற்ற ஆணுக்கு பெண் என்ற சக்தி தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. பெண்மையை பற்றி இந்த விளக்கத்தை நம் மனத்தில் நிறுத்திக்கொண்டு, ராமாயணத்தையும், பாரதத்தையும் ஆராய்வோம்.
ராமாயணத்தில் போரிட்டது இராமன். மகாபாரதத்தில் போரிட்டது பாண்டவர்கள். அந்த இரு மாபெரும் போரில் போரிட்டவர்கள் அனைவரும் ஆண்கள். அந்த போருக்கு மூலகாராணம், அதர்மத்தை வெல்வது ஆகும். ஆனால் அந்த தர்மத்தை வெல்வதற்கு உந்துசக்தியாய் இருந்தவர்கள் இருபெண்கள் (சீதையும், திரௌபதி) என்பது எல்லோரும் அறிந்ததே ! கம்பராமாயணத்திலும், வில்லிபாரதத்திலும் இந்த பெண்மை இரு காட்சியில் மேன்மேலும் (எனக்கு தெரிந்த அளவில்) போற்றப்பட்டுள்ளது. அதை காண்போம்.
கம்பராமாயணத்தில் கன்னி மாட காட்சி : சீதை கன்னி மாடத்தில் விளையாடி கொண்டிருக்கிறாள். இராமன் விஸ்வாமித்திரர் முனிவருடன் வந்து கொண்டிருக்கிறான். தனது சக்தியை பார்வையின் மூலம், வேறு எந்த ஆடவனுக்கும் தரக்கூடாது என்ற நோக்கத்தில், பூமித்தாயை மட்டும் பார்க்கிறாள். ராமனோ பாற்கடலில் தன்னை விட்டு பிரிந்து சென்ற சக்தியை தேடி மேல்நோக்கி பார்த்தபடியே நடக்கிறான்.
இந்த நேரத்தில் ஒரு சின்ன பிளாஷ்பேக். சீதை சிறுவயதில் விளையாடும்போது சிவதனுஷை விளையாட்டாக நகர்த்தி விட்டாள். அறுபதினாயிரம் பேர் கொண்டு தூக்கும் அந்த வில்லை அவள் ஒருத்தியே தூக்குகிறாள் என்றால், இவள் ஆதிபராசக்தியின் அம்சம் என்றுணர்ந்தான் ஜனகன். அதனால்தான் அந்த வில்லின் நாணேற்றுபவனுக்கு எனது மகள் என்று அறிவித்தான் ஜனகன். தனிப்பெரும் சக்தியாக மட்டுமே பெண்ணால் இயங்க (வில்லை நகர்த்தியது) முடியும் என்பது இங்கு குறிப்பு.
மறுபடியும் கன்னி மாட காட்சிக்கு வருவோம். இப்பொழுது இராமன் சீதையை பார்க்கிறான். சீதையின் முகத்தையும், இருதயத்தையும் பார்க்கிறான். சீதையோ இராமனின் முகம் பார்த்த பின்னர், அவனது தோளையும், கையையும் பார்க்கிறாள். முகம் பார்த்து பாற்கடலில் தன்னை பிரிந்தவன் என்று உணர்கிறாள். அடுத்து அவனை மணக்க வேண்டுமானால், அவன் வில்லின் நாணேற்ற வேண்டும். வில்லை தூக்க தோளுக்கு வலிமையும், நாணேற்ற கைகளுக்கு வலிமையும் தேவை. இராமனுக்கு அந்த சக்தியை அளிக்கவே அவனது தோளையும், கையையும் பார்த்தாள் என்பது கம்பன் சொல்லாமல் சொன்ன செய்தி.
'பெண் என்பவள் தன் சக்தியால் தனித்து இயங்கவும் முடியும். தேவைப்படும் நேரத்தில் அந்த சக்தியை ஆணுக்கு அளித்து, அவனை இயங்க வைத்து தேவையானதை பெற்றுக் கொள்ளவும் முடியும். ' என்பது இதில் தெளிவாக தெரியும் உண்மையாகும்.
இப்பொழுது எல்லோருக்கும் எழும் கேள்வி ஒன்று. அனுமன் ஒரு பிரம்மச்சாரி, பலசாலி, பராக்கிரமசாலி. அவருக்கு யார் சக்தியாக திகழ்கிறார்?? அதையும் ஆராய்வோம். அனுமன் கூட சுந்தர காண்டத்தில் முதலில் அமைதியானவராக இருப்பார். அதாவது அசோகவனத்தில் சீதை காணும்வரை பரம சாதுவாக, அமைதியாக இருந்தார். கடலை தாவும்போது ஓரே ஒரு அரக்கியை மட்டும் கொன்றார். சீதையை கண்டு சூடாமணியை வாங்கிய பின்னர் அவரின் செய்கையை பார்த்தால், ஊறுகாலத்தில் உலவும் ருத்திர மூர்த்தி போலிருக்கும். சீதையின் கற்புநிலை (சக்தி) கண்ட பின்னர், அவர் கொன்றவர்களின் பட்டியல் :- அசோகவனத்தின் காவலர்கள், கிங்கிரர்கள், சம்புமாலி, அக்கயகுமாரன். ஆக மொத்தத்தில், அனுமன், சுந்தர காண்டத்தின் முதல்பகுதியில், (சீதை காண வேண்டும் என்று) தவம் புரியும் சிவனாகவும், பிற்பகுதியில் (சீதையை கண்டு சக்தி பெற்று) ருத்திர தாண்டவம் ஆடும் சங்கரனாகவும் காட்சியளிக்கிறார்.
'இவளின் கற்புநிலை இந்த உலகையே உய்விக்ககூடிய சக்தி வாய்ந்தது. அப்படிப்பட்ட பெண்ணை மணந்த இராமன் சர்வ நிச்சயமாக அண்டர் நாயகன்.', என்று உணர்ந்து இராமபக்தன் ஆனான் அனுமன். அவனுக்கு சக்தி அளிப்பது ஸ்ரீஇராம நாமமும், அவன் மனதில் என்றும் வாழும் ஜானகி-ராமனும் ஆகும். [இராமனுக்கு யார் சக்தியாய் திகழ்கிறார் என்று ஏற்கனவே பார்த்தாகிவிட்டது.]
இப்பொழுது வில்லி பாரதத்திற்கு வருவோம். பாண்டவர்களின் பதினான்கு வனவாசமும், ஓராண்டு அஞ்ஞாதவாசமும் முடிந்து போருக்கு தயார் ஆகின்றனர். அதற்கு முன்னர், கிருஷ்ணனை தூது அனுப்ப முடிவு செய்துள்ளனர். அப்பொழுது கிருஷ்ணனுக்கும் சகாதேவனுக்கும் ஏற்படும் உரையாடலில் கிருஷ்ணன் சகாதேவனிடம் ஒரு சவால் விடுகிறான். அதாவது, 'பாரதப்போரை நிறுத்த முடியுமா?' என்று கிருஷ்ணன் கேட்கிறான். சகாதேவனும், மூன்று காரியங்கள் செய்தால் நிறுத்தலாம் என்று பதிலளித்தான். அவைகள் பின்வருமாறு ...
1. வில் விஜயனை கொன்று விடுதல் - விஜயன் இருக்கும் தைரியத்தில் தான் மற்ற நால்வரும் போரை கண்டு அஞ்சவில்லை. விஜயனை கொன்று விட்டால், தருமர் போரை தொடங்க மாட்டார்.
2. கிருஷ்ணனை கட்டி போடுதல் - தான் நினைத்தது நடக்க எல்லா விதமான குட்டி கலாட்டா செய்பவன் கிருஷ்ணன். கௌரவர்களை கொல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், தனி ஒருவனாக சென்று போரை நடத்தி முடித்து விடுவான். ஆகையால் இவனை கட்டிப்போட்டே ஆக வேண்டும்.
3. திரௌபதிக்கு மொட்டை போடுதல் - திரௌபதி தனது சபதத்தின் காரணமாக தலைவிரி கோலமாக இருக்கிறாள். அவளது முடியாத கூந்தலை பார்க்கும்பொழுது எல்லாம் நால்வருக்கும் அந்த துகிலுரிப்பு சம்பவம் நினைவுக்கு வந்து கௌரவர்கள் மேல் தாங்கவொண்ணா கோபம் வரும். அது போருக்கு வழி வகுக்கும்.
சகாதேவன் இந்த மூன்றுமே செய்ய வேண்டும் என்று கூறுகிறான். விஜயனை கொன்ற பின்னரும், கிருஷ்ணனை கட்டிப் போட்ட பிறகும், பாரதப்போரை நடத்தும் சக்தி திரௌபதியின் கூந்தலுக்கு உண்டு என்பது சகாதேவனின் வாதத்தின் அடிநாதம். 'குருடனின் மகன் குருடன்' என்று சொல்லி, பாரத போருக்கு அடித்தளம் அமைத்ததும் திரௌபதி. துரியோதனனுடைய இரத்தத்தை தனது கூந்தலில் தடவி, அப்போரை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தவளும் திரௌபதி.
மொத்தத்தில் பெண்மை என்ற சக்தி அளப்பரியது. அதை திரௌபதி போல் குடும்பச்சண்டைக்கு பயன்படுத்தி தத்தம் குடும்பத்தையும், வம்சத்தையும் (அபிமன்யு, பீமனின் மகன் கடோத்கஜன்) அழிக்க வேண்டாம். சீதையை போல் அதர்மத்தை (அசுர வம்சம்) மட்டும் அழிக்க பயன்படட்டுமே...
Showing posts with label கட்டுக்கதைகள் அல்ல.... கட்டுரைகள்.. Show all posts

Saturday, May 8, 2010
Saturday, October 27, 2007
நான் + ஆத்திகன் = நாத்திகன்.
"இறைவன் இருக்கிறாரா?", பற்பல வருடங்களாக நடந்து வரும் ஒரு பெரிய கருத்து மோதலின் சிறு பகுதி என்று இதை கொள்ளலாம். இந்த கட்டுரையின் நோக்கம் தீர்வல்ல. தீர்வை நோக்கிய ஒரு பயணம். இதில் பயணப்பட விரும்புவர் மட்டும் தொடரவும். மற்றவர் இந்த இடத்திலே பிரிந்து கொள்ளலாம்.
இந்த கட்டுரையில் எனது மனத்திற்கும், எனது அறிவிற்கும் நடக்கும் ஒரு உரையாடலைத்தான் எழுதி இருக்கிறேன். இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால், மனம் என்பது ஒரு பஞ்சு போல். எந்த விஷயம் சொன்னாலும் அப்படியே ஏற்று கொள்ளும். பஞ்சு நீரை, நெருப்பை ஏற்று கொள்வது போல். அறிவு என்பது அன்னம் போல். நீரையும், பாலையும் வைத்தால் பாலை மட்டும் பிரித்து எடுத்து கொள்ளும். அறிவு என்பது நல்லது, கெட்டது எனப் பகுத்தறிந்து சரி எனப்படுவதை மட்டும் எடுத்துக்கொள்ளும்.
நான் ஆத்திகனா, நாத்திகனா என்பது எனக்கு தெரியாது. ஆகையால் அதை எனது மனமும், அறிவும் சொல்லட்டும் என விலகிவிட்டேன்.
மனம் ஆரம்பித்தது, "நான் ஒரு ஆத்திகன். என் பாட்டியார் வாழ்வில் கோயில் செல்லாத நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். என் தாயார் வீட்டில் செலவிடும் நேரத்தை விட கோயிலில் செலவிடும் நேரமே அதிகம். இவர்கள் வளர்த்த பிள்ளை நான். தெய்வ நம்பிக்கை உடையவன். ஆகையால் நான் ஒரு ஆத்திகன்."
அறிவு எதிர்த்தது, "நான் ஒரு நாத்திகன். என் தந்தையார் பெரியார் வழி செல்பவர். பகுத்தறிந்து செயல்படு, என்பதே எனக்கு சொல்லிகொடுக்கப்பட்ட மந்திரம். என் தாத்தா ஒரு நாத்திகர். கடவுள் இல்லை என்று சொல்பவர். இவர்களை பார்த்து வளர்ந்த நான் மட்டும் எப்படி ஆத்திகன் ஆக முடியும்? தெய்வ நம்பிக்கை கொண்டவன் என்று சொல்லும் மனமே, கடவுளை கண்டு இருக்கிறாயா??"
"இல்லை. நான் கேட்கிறேன். கரண்ட், காற்று இந்த பூமியில் உண்டா??"
"உண்டு."
"கண்டு இருக்கிறாயா?? "
"இல்லை. ஆனால் உணர்ந்து இருக்கிறேன்."
"நானும் கடவுளை உணர்ந்து இருக்கிறேன். அதுவும் பிறந்த சில நிமிடங்களில்.... "
"எப்படி??? எப்படி???"
"பிறந்த சில நிமிடங்கள் நான் சுவாசிக்கவில்லை. இறந்து விட்டேன், என்று முடிவு செய்து விட்டனர். அந்நேரத்தில் அங்கு வந்த என் பெரிய பாட்டி என்னை வேட்டியில் போட்டு உருட்டி மூச்சு விட வைத்தார். அதற்காக என் பாட்டியை தெய்வம் என்று சொல்ல வில்லை. அவரை அங்கு வர வைத்தது தெய்வ செயல். அன்று அந்த இடத்தில் என் பாட்டி வரவில்லையென்றால், நானும் இல்லை. இந்த கட்டுரையும் இல்லை."
"இதில் எங்கு தெய்வ செயல் இருக்கு? நீ பிறந்த ஆஷ்பத்திரியின் பக்கத்தில் உன் பாட்டி வீடு. இரண்டு நிமிடத்தில் வந்து விடலாம். உன் பாட்டியை அங்கு வர வைத்த கடவுள், உனக்கு பிறந்த உடனே மூச்சை கொடுத்து இருக்கலாமே.... சில நிமிடங்கள் தாமதம் செய்வதால், அவர் என்ன செய்ய போகிறார்??"
"என் விதி பத்து நிமிடங்கள் கழித்து தொடங்கி இருக்கலாம். நான் முந்திரிக்கொட்டை போல, வெளி உலகை பார்க்கும் ஆர்வத்தில் பத்து நிமிடம் முன்னமே வந்து இருப்பேன். கடவுள் வெயிட்டிங் லிஷ்டில் போட்டு இருப்பார்."
"அதைத்தான் நானும் சொல்கிறேன். உன் வாழ்வில் நடப்பதற்கு காரணம், உன் செயலும், உன்னை சுற்றி உள்ளவர்களின் தாக்கமும்தான். அது சரி, கடவுள் எப்படி தோன்றினார்?"
"அவர் ஒரு சக்தி. தானாக தோன்றியவர். அவர் ஒரு சுயம்பு. தானாக தோன்றிய பின்னர், இந்த பிரபஞ்சத்தை படைத்தார். இந்த உலகத்தை படைத்தார். இந்த உலகில் எங்கும் நிறைந்து இருக்கிறார்."
"கடவுள் தானாக தோன்றியது போல், இந்த உலகமும் தானாக தோன்றி இருக்க கூடாதா?? அப்படி எங்கும் நிறைந்து இருக்கும் அந்த சக்தியை ஏன், கோயிலில் மட்டும் வணங்குகிறீர்கள்??"
"காற்று கூடத்தான் எங்கும் நிறைந்து இருக்கிறது. அதை ஏன் டயரில் அடைத்து வைக்கிறீர்கள்??"
"அப்படி அடைத்து வைத்தால்தான் அது டயர். இல்லையென்றால், அது ஒன்றுக்கும் உபயோகப்படாது."
"அது போலத்தான், இதுவும். எங்கும் நிறைந்து இருக்கும் அந்த பரமசக்தியை கோயிலில் சாமியின் சிலையில் ஏற்றி வைக்கிறார்கள். ஒன்றாய் குவியும் சூரிய ஒளி எப்படி தாளை பற்ற வைக்கிறதோ, ஒன்றாய் குவியும் சக்தி பக்தர்களை பரவசப்படுத்துகிறது. கடவுள் இருக்கிறார் என்பதை எந்த காரணத்தை வன்மையாக எதிர்க்கிறாய்?"
"முதல் காரணம், உன்னால் பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கு ஒரு காரணகர்த்தாதான் கடவுள். தேவையில்லாத பயத்தை போக்க உனக்கு ஒரு நாயகன் வேண்டும். அதற்காக உருவாக்கப்பட்டவரே கடவுள்."
"புரியவில்லை."
"பிரபஞ்சத்தில் எங்கும் வெற்றிடமாக இருக்க, பூமியில் மட்டும் மனிதன் வாழ நீர், காற்று, எப்படி கிடைத்தது?? என்ற கேள்விக்கு பதில் கடவுள் என்பாய். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், மனிதர்களால் காப்பாற்ற முடியாத நிலைமையில் இருக்கும் உன் பயத்தை போக்க யாரை வேண்டுவாய்?? என்ற கேள்விக்கும், கடவுள் என்பாய். சரிதானே??"
"கண்டிப்பாக !!! நீ என்ன பதில் சொல்வாய்??"
"சொல்கிறேன். குழம்பாதே. இந்த பிரபஞ்சம் தானாக தோன்றியது. அதில் உள்ள பொருள்களின் நிலை இரண்டை பொறுத்து மாறும். ஒன்று அதின் பழைய நிலை. மற்றொன்று, இந்த பிரபஞ்சத்தில் உள்ள மற்ற பொருள்கள் அதன் மேல் ஏற்படுத்தும் தாக்கம். தற்சமயம், கல்லூரியில் பயன்படுத்தப்படும், ரிலேட்டிவ் கிரேடிங் இதற்கு நல்ல உதாரணம். ஒரு மாணவன் ஐந்தாம் நிலையில் படிக்கிறான். ஆறாம் நிலைக்கு செல்ல வேண்டும். அந்த நிலை மாற்றத்திற்கு இரண்டு காரணம், ஒன்று அவனின் உழைப்பு, மற்றொன்று அவனுடன் படிக்கும் மாணவர்களின் உழைப்பு. புரிகிறதா??"
"புரிகிறது. மற்ற மாணவர்களை விட நன்றாக படித்து இருந்தால், இவன் முதலிடம், இல்லையென்றால் கடைசி இடம். ஆனால் நீ அந்த இரண்டு கேள்விக்கு பதில் சொல்லவில்லையே??"
"இதை புரிந்து கொண்டால், நீயே பதில் சொல்லலாம். பூமிக்கு நீர், காற்று வர காரணம் அதை சுற்றி உள்ள ஒன்பது கோள்கள், மற்றும், சூரியன். கண்சிமிட்டும் நேரத்தில் இந்த மாற்றம் ஏற்படவில்லையே. இந்த மாற்றம் நடக்க பல கோடி வருடங்கள் ஆனது. கோள்கள் வேறு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் வேறு ஏதாவது நடந்து இருக்கலாம்."
"இரண்டாவது கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன். என் வாழ்க்கை என் கையில் மட்டும் இல்லை. இந்த பிரபஞ்சத்தில் உள்ள மற்றவை கைகளிலும் உள்ளது. செல்வ் ஷேவிங் செய்யும் போது என் கையில் இருக்கும் என் உயிர் (அ) வாழ்க்கை, பார்பர் ஷேவ் செய்யும்போது அவன் கையில் உள்ளது. ஆகையால், பயம் கொள்ள தேவையில்லை. அந்த மாணவன் போல் என் கடமையை சரியாக செய்தால் போதும் என்கிறாய்."
"சரியாக சொன்னாய். என் வாதத்தை ஏற்று கொள்கிறாயா??"
"ஏற்று கொள்கிறேன். ஆனால் இரண்டு கேள்விகள். ஒன்று, இந்த கலவையின் ரேஷியோ என்ன?? அதாவது, எனது வாழ்வில், எனது தாக்கத்திற்கு எவ்வளவு பங்கு? பிரபஞ்சத்தின் தாக்கத்திற்கு எவ்வளவு பங்கு? மற்றொன்று, பிரபஞ்சத்தை உருவாக்கியது யார்??"
"ம்ம்ம்.... இப்பொழுது மாட்டிகொண்டேன். இரண்டிற்கும் ஒரே பதில்தான். அந்த கலவையின் ரேஷியோ என்பது விதி (அ) கோட்பாடு. அந்த கோட்பாடை உருவாக்கியவன் தான் பிரபஞ்சத்தை படைத்தவன். இப்படி கூட சொல்லலாம். அந்த கோட்பாடின் மூலம் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கி இருக்கலாம். மொழியை படைத்தவன் யார் என்று கேட்டால், நான் என்ன பதில் சொல்வது??"
"கேள்விக்கு எதிர் கேள்வி பதிலாகாது. நான் பதில் சொல்லட்டா??"
"ம்ம்ம்... சொல்லு பார்க்கலாம்."
"நான் அதை கடவுள் என்கிறேன். உன்னிடம் இரண்டு அஷம்ப்ஷன்ஷ் இருக்கு, அதை கடவுள் என்கிறேன். உனது உதாரணத்தையே திரும்ப சொல்கிறேன். மாணவன் படித்து, பரீட்சை எழுதும் வரை அது அவனது செயல். அவனது படிப்புக்கு ஏற்ற மதிப்பெண் கொடுப்பது கடவுளின் செயல். என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றை கடவுள் என்று நீ சொன்னாய். உன்னால் கண்டு பிடிக்க முடியாததை நான் 'கடவுள்' என்கிறேன். வருத்தமா??"
"இல்லை. ஏற்றுகொள்கிறேன்."
"ஆக, நாத்திகனாகிய நீ, பிரபஞ்சத்தில் உள்ள சக்தியின் தொடர்ச்சி நீ என உணர்ந்தால், உனது செயல், கடவுள் செயலின் ஒரு பகுதி என உணர்வாய்."
"விளங்கவில்லை."
"'நான்' என்ற அகங்காரத்தை (அ) எனது செயலின் தாக்கத்தை, ஒழித்து பார்த்தால் மிஞ்சி இருப்பது கடவுளின் செயல். அது தான் ஆத்திகம். புரிகிறதா??"
"ம்ம்ம்ம்ம்....."
"உனது செயலை கடவுளுக்கு அர்பணித்து விட்டால், நாத்திகனாகிய நீ, ஆத்திகனாய் ஆவாய். அது மட்டுமல்ல, அது நல்ல செயல் என்றால் கடவுள் ஆவாய் !!!"
முன் சொன்னது போல், இதற்கு இப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளேன்.

Wednesday, May 23, 2007
ம(ற)றைந்து போன விளையாட்டுக்கள்....
ம(ற)றைந்து போன விளையாட்டுக்கள்....
சமீபத்தில் ஒரு விளம்பரம் பார்த்தேன். அதில் விளையாட வேண்டிய சிறுவர்கள், உள்ளே அமர்ந்து 'Video Game' விளையாடுவார்கள். ஆனால் உள்ளே அமர வேண்டிய தாத்தாக்களோ தெருவில் விளையாடுவார்கள். நமது பாரம்பரிய விளையாடு என்ன ஆனது? அது மறக்க பட்டதா? இதற்கு என்ன காரணம்? யார் காரணம் என்ன? இதனால் ஏற்படும் விளைவுகள்? என்ற என் கேள்வியின் பதிலாக விளைந்ததே இந்த பதிவு (அ) கட்டுரை.
முதலில் 20 வருடத்திற்கு முன் நாம் விளையாடிய விளையாட்டு என்ன, அதன் பயன் என்ன, எப்படி விளையாடுவது என்று பார்ப்போம்.
உள் அரங்கு விளையாட்டு.
1. ஆடுபுலியாட்டம் - ஒரு கட்டம் போடப்படும். மூன்று புலிகள். பதினைந்து ஆடுகள். புலி அனைத்து ஆடுகளையும் கொன்றதா? ஆடு புலிகளை மடக்கியதா? என்பதே விளையாடு. - புத்தி கூர்மை அடையும்.
2. உள்ளூர் சதுரங்கம் - ஒரு சதுரத்திற்குள் குறுக்கும் நெடுக்குமாக நான்கு கோடுகள் போடப்படும். ஆளுக்கு மூன்று காய்கள் கொடுக்கப்படும். மூன்றையும் நேர்கோட்டில் கொண்டு வர வேண்டும். - புத்தி கூர்மை அடையும்.
3. தாயம் - ஆறுக்கு ஆறு, என்று சதுரம் வரைந்து விளையாடும் ஆட்டம் - சூதாட்டம், பயனில்லை.
4. பாம்பு தாயம் - விளக்கம் தேவையில்லை - சூதாட்டம், பயனில்லை.
5. சீட்டு கட்டு - அனைத்து சீட்டுகளும் தலை கீழாக போடப்படும். ஜோடியாக எடுத்தால் வைத்து கொள்ளலாம். யார் அதிக ஜோடி எடுக்கிறாரோ அவருக்கே வெற்றி. - ஞாபக சக்தி வளரும்.
வெளி அரங்கு விளையாட்டு.
1. செதுக்காங்கல் - சிகரெட் அட்டை ஒரு வட்டத்திற்குள் போடப்படும். கல் மூலம் அதை வெளியே கொண்டு வர வேண்டும். - அட்டைகளை எண்ணுவதால் கணிதம் நன்றாக வரும்.
2. செவன் ஷ்டோன் - ஏழு கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்க வேண்டும். பந்தை வைத்து அதை குழைக்க வேண்டும். குழைத்த பின் வரிசையாக அடுக்க வேண்டும். அடுக்குவதற்குள், எதிராளி பந்தால் நம்மை அடித்து விட்டால், அவனுக்கு 1 பாயிண்ட். நாம் அடுக்கிவிட்டால் நமக்கு 1 பாயிண்ட் - குழுவேலை நன்றாக வளரும். ஒடுவதால் உடல் வழுவாகும்.
3. கண்ணாம்மூச்சி - கண்களை கட்டிகொண்டு எதிராளியை தொட வேண்டும். - கண்களை கட்டி கொள்வதால், செவித்திறன் வளரும். உற்று கவனிக்கும் திறன் அதிகரிக்கும்.
4. கல்லா? தரையா? - இதில் பட்டு வருபவர் (Cஅட்செர்) கல் அல்லது மண் தேர்ந்தெடுக்க வேண்டும். மண்ணை தேர்ந்தெடுத்தால், மண்ணில் இருப்பவரை அவர் தொட்டால் அவர் ஓஉட். அவர் பட்டு வர வேண்டும்.
மொத்தத்தில் நமது பழைய விளையாட்டை விளையாடினால், உடல் மட்டுமல்ல மனமும் வழுவாகும். தோல்வி கண்டு துவளா மனம் உண்டாகும். மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதால் அவர்களுக்கு குழுவேலை நன்றாக வளரும். மற்ற ஊர் குழந்தைகளுடன் விளையாடுவதால் கலாச்சார பரிமாற்றம் ஏற்ப்பட வாய்ப்புகள் அதிகம்.
இத்தகைய விளையாட்டை இக்கால குழந்தைகள் ஏன் விளையாடுவதில்லை என்ற கேள்விக்கு பல பதில்கள் கிடைத்தன.
முதலவதாக விளையாட நேரம் இல்லை. கணினி வகுப்பு, நீச்சல் வகுப்பு, ஹிந்தி வகுப்பு, அபேகஷ் என்று அவர்களுக்கு ஒரு நாளுக்கு 24 மணி நேரம் படிக்கவே போதவில்லை.
இரண்டவதாக அந்த விளையாட்டை கற்றுக் கொடுக்க தாய் - தந்தைக்கு நேரம் இல்லை.
மூன்றவதாக பழைய விளையாட்டு என்று ஒதுக்கிவிடுகின்றனர். 'என் அப்பா விளையாடிய விளையாட்டு இதை யாருடா விளையாடுவார்கள்?' என்று விளையாடுவதை அவமானமாக கருதுகின்றனர்.
மிக முக்கியமான காரணம் - கணினி விளையாட்டு. இது விளையாடினால், குழந்தைகளுக்கு சோறு, தண்ணீர், அம்மா என்று எதுவும் வேண்டாம்.
வருடம் முழுவதும் படிப்பை பற்றி மட்டுமே யோசிக்கும் குழந்தைகளுக்கு, கோடை விடுமுறையே சொர்க்கம் ஆகும். நன்றாக ஒடி விளையாடி அவர்களை புதுப்பித்து கொண்டால்தான், அவர்களால் அடுத்த வருடத்தையும் புத்துணர்ச்சியுடன் எதிர்கொள்ள முடியும். நமது கனவுகள், நமது நாட்டை தாங்கி பிடிக்க போகும் குழந்தைகள் அறிவில் மட்டும் சிறந்தவர்களாக இருந்தால் போதாது. மனபலம், உடல் பலம் படைத்தவர்களாக இருக்க வேண்டும்.
இவ்விரண்டையும் வழங்கும் பழைய விளையாட்டுகள் நம் குழந்தைகள் விளையாட காண்போமாக!!!

Subscribe to:
Posts (Atom)