Saturday, June 2, 2007

சிங்கப்பூர் பற்றி...

இந்தியாவில், சில ஊரில் நான் தங்கி இருந்தாலும், முதன்முதலில் நான் வந்த வெளிநாடு என்பதால் இதைப்பற்றி ஒரு பதிவு போடலாம் என்று நினைத்தேன். இங்கு நான் வந்து 6 மாதம்தான் ஆகிறது. ஆகையால் எனக்கு தெரிந்த அளவுக்கு எழுதுகிறேன்.

சிங்கப்பூரில் சீனர்கள், தமிழர்கள், மலாய் மக்கள் என்று பல் இனத்து மக்கள் கலந்து வசிக்கின்றனர். இங்கு தமிழ், சீனம், மலாய், ஆங்கிலம் ஆகியவை முக்கிய மொழிகளாக கருதப்படுகின்றன. பல தமிழர்கள் இங்கு மூன்று தலைமுறையாக இங்கு வசிக்கின்றனர்.

இங்கு இருப்பவர்கள், அனைவருக்கும் வேலை தான் முக்கியம். வீண் பேச்சு எதுவும் கிடையாது. ரயில் நிலையத்தில் யாரும் நடந்து செல்ல மாட்டார்கள். கிட்டதட்ட ஓடுவார்கள். இந்த ஓட்டத்தை இந்தியாவின் மும்பையில் மட்டும் பார்த்து இருக்கிறேன். வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லோரும் உழைக்கும் நாடு இது.

என்னை மிகவும் கவர்ந்தது இங்கு இருக்கும் ஏகப்பட்ட மரங்களே. இங்கு மரங்கள் பல இருப்பதால் மழை அடிக்கடி பெய்யும். மத்திய ரேகைக்கு கீழே இருப்பதால் இங்கு வெயிலும் அடிக்கும். வெயிலும் அதிகம், மழையும் அதிகம். ஏர்கான் இல்லையென்றால் இங்கு யாரும் உயிர் வாழ இயலாது.

பொழுதுபோக்கு என்று பார்த்தால் 24 மணி நேரமும் ஒலிப்பரப்பாகும் பண்பலை வரிசை ரேடியோ(ஒலி 96.8) உள்ளது. மாலை மட்டும் ஒளிபரப்பாகும் வசந்தம் - சென்ட்ரல் என்ற சேனலும் உள்ளது. மற்றபடி தமிழகத்தில் ஒளிபரப்பாகும் சன் - டிவி மற்றும் விஜய் - டிவியும் ஒளிபரப்படும். என்ன ஒரு குறை என்றால் தமிழகத்தில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வாரம் சென்று இங்கு ஒளிபரப்பாகும்.

போக்குவரத்து பற்றி சொல்லியே தீர வேண்டும். ஓர் இடத்தில் இருந்து மற்ற இடத்துக்கு செல்வது இங்கு எளிது. Taxi அடிக்கடி கிடைக்கும். பஷ் மற்றும் ரயில் போக்குவரத்தும் உண்டு. அமெரிக்காவில் படித்த என் நண்பன் சொன்னது. Ez-Link கார்ட் என்று ஒன்று உள்ளது. இதில் பணம் போட்டு Top-up பண்ணிக்கலாம். தேவைப்படும்போது பஷ்ஷிலோ, ரயில் நிலையத்திலோ உபயோகப்படுத்திக்கலாம். இந்த முறை அமெரிக்காவில்கூட இல்லை என்று அமெரிக்காவில் படித்த நண்பன் கூறியுள்ளான்.

இங்கு இருக்கும் பெண்களை பற்றி கூறவில்லையென்றால் இந்த பதிவு முழுமை பெறாது. சீன மக்களுடன் சேர்ந்து வாழ்வதால், தமிழ் கலாச்சாரம் கொஞ்சம் மாறியுள்ளது. ஆகையால் தமிழகத்திலிருந்து வரும் ஆண்களுக்கு இங்கு இருக்கும் பெண்களை பிடிக்கும் வாய்ப்பு குறைவு. தமிழகத்தில் கூறப்படும் மொக்கை, அட்டு விகர்கள்தான் அதிகம்.

வேலை பார்ப்போர், படிப்போர், குடும்பத்தோடு வாழ ஒரு அழகான, நிம்மதியான நாடு சிங்கப்பூர் என்று ஐயமில்லாமல் கூறலாம்.

4 comments:

துளசி கோபால் said...

படிச்சேன்.

வடுவூர் குமார் said...

சிங்கப்பூர் சிகரெட் விலையை பார்த்தும்,குழந்தையில் இருந்து தம் அடிச்சிட்டு வருகிறீகளா?
பாத்துங்க ,சம்பளம் காலியாகிவிடும்.

Subramanian said...

வலைப்பதிவர்களாகிய நாம் மற்றவர்களீடமிருந்து மிகவும் வித்தியாசப்பட்டவர்கள்.நமது எழுத்துக்களால் சற்றேனும் இச்சமுதாயம் மாறுமா என்று ஏங்குபவர்கள்.சிகரட் குடிப்பது உடல்நலத்திற்குத் தீங்கு என்ற உண்மை உங்களுக்கு ஏற்புடையது தானே?வடுவூர் குமார் சொன்னது போல் குழந்தையிலிருந்தே புகை பிடிக்கிறீர்களாக்கும்.அது உங்கள் உரிமை.ஆனால் உங்கள் புரொபைலில் காட்டிக் கொள்ளாதீர்கள்.மற்ற குழந்தைகளைக்(!!)கெடுத்து விடும்.
இப்பதிவைப் பின்னூட்டமாகப் போடுவதும் போடாததும் உங்கள் விருப்பம்.சொன்னதில் தவறிருந்தால் மன்னியுங்கள்.

பாலு மணிமாறன் said...

சிங்கப்பூரின் இன்னொரு வலைப்பதிவரை சந்தித்ததில் மகிழ்ச்சி. சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் சேர்ந்து "சிங்கைமுரசு" என்ற ஒரு வலைப்பூவை வைத்துள்ளோம். நேரம் கிடைக்கும்போது பாருங்கள்
http://singaimurasu.blogspot.com/