Sunday, June 3, 2007

சிகரெட் - சீக்ரெட்.

என் பதிவில் உள்ள குழந்தையின் படத்தை பார்த்து வந்த பின்னூட்டங்களின் பதிலே இந்த பதிவு.



நான் கல்லூரியில் படிக்கும்போது ஒரே ஒரு முறை சிகரெட் பிடித்துள்ளேன். அதன்பிறகு அந்த வாடை கூட எனக்கு பிடிக்கவில்லை. அன்று முதல் இன்று வரை நான் சிகரெட் பிடித்தது கிடையாது. என் நண்பர்களையும் பிடிக்க வேண்டாம் என்று சொல்வேன். அதற்கு மூன்று காரணங்களும் சொல்வேன்.

1. மற்ற கெட்ட பழக்கங்கள், நம்மை மட்டும் பாதிக்கும். இது கூட இருப்பவரையும் பாதிக்கும்.
2. காசை கொடுத்து நம் உடலை நாமே கெடுத்து கொள்வதா? வடுவூர் குமார் சொன்னது போல, சிங்கப்பூரில் சிகரெட் விலை அதிகம். 1 பாக்கெட் சிகரெட் வாங்கும் காசில் இரு வேளை சாப்பிட்டு விடலாம்.
3. ஒரு நாள் ஒரு சிகரெட் குடித்தால், நம் வாழ்நாளில் ஒரு நாள் குறையும்.

ஆகையால் நானும் சிகரெட் பிடிப்பதில்லை, என் நண்பர்களை பிடிக்க அனுமதிப்பதுமில்லை.

இந்த குழந்தை படத்துக்கு வருவோம். இது அழகான குழந்தை. ஒரு கணினி பொறியாளன் சிறு வயதில் எப்படி யோசிப்பான் என்பதை காட்டுவதாக வந்த படம் இது. சிகரெட்டை விட்டுவிட்டு அதன் கை அசைவையும், புருவ அசைவையும், கண் அசைவையும் பார்த்தால் மிகவும் அழகாக இருக்கும். நான் ஒரு கணினி பொறியாளன். சிறுவயதில் இப்படி இருந்து இருக்கலாம் என்ற என் எண்ணத்தினாலே இந்த படம்.

இதைப்பார்த்து யாரும் கெட்டுப்போக மாட்டார்கள் என்பது என் வாதம்.

"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது." - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொன்னது
"தானாய் பார்த்து கெடாவிட்டால் தன்னை யாரும் கெடுக்க முடியாது. " - நான் சொல்வது.

சொன்னதில் தவறிருந்தால் பின்னூட்டமிடுங்கள்.

4 comments:

வடுவூர் குமார் said...

ராமா
நம் பதிவில் யார் எதை பார்க்கிறார்கள் என்று சொல்லமுடியாது.
இரண்டுங்கெட்டான் பார்த்து,குழந்தையே பிடிக்குது எனக்கென்ன? என்று ஆரம்பித்தால்?
படத்தை எடுத்ததற்கு நன்றி.

Rama said...

மன்னிக்கவும் குமார். தற்சமயம், என்னை கவர்ந்த வேறு படங்கள் இல்லாததால் இதையே போட்டு இருக்கிறேன். கூடிய விரைவில் மாற்ற திட்டமிட்டுள்ளேன். அது வரைக்கும் கீழே எச்சரிக்கை போட்டு உள்ளேன்.

Dhavappudhalvan said...

Hollo Rama, அட ராமா!!! திரு.சர்வதிகாரி அவர்களின் வலைப்பதிவைப் பார்வையிட்டப்போது, உங்கள் கருத்துக்களால்,உங்கள் பின்னூட்டத்தையும் கண்டேன். கிடைக்கும் என்றில்லாமல், வேறு படத்தைப்போடவும் (அ) அப்படத்தின் மேலேயே தப்புக்குறியிட்ட மண்டையோட்டு படத்தையும் வெளியிடவும்.

இது உங்கள் பார்வைக்காக:
http://aambalmalar.blogspot.com

நளாயினி said...

ஐயோ ஐயோ. தலையை எங்கை கொண்ட போய் முட்ட. இன்றய குழந்தைகளுக்கு நல்லாவே யாவும் தெரிகிறது. எது நல்லது கெட்டது என.