தவறென்று தெரியாமல் குழந்தை செய்யும் குறும்பா??
அதை மன்னித்து,மறந்து ரசிக்கும் தாயின் குறுநகையா??
தன் காதலிக்காக வான் பொழியும் முத்த மழையோ??
அதை வாங்கி பூமி ஏழு நிறத்தில் வெட்கப்படும் அழகோ??
தகாத கேள்வி வினவும் பிள்ளையின் ஆர்வமா??
பதில் தர முடியாமல் முழிக்கும் தந்தையின் தவிப்பா??
வேண்டுமென்றே அடித்து அழவைக்கும் அண்ணனின் அன்பா??
அழுவது போல் நடித்து அன்னையிடம் அடி வாங்கி தரும் தம்பியின் பாசமா??
இவையெல்லாம் கொடுத்த இறைவனின் பெருந்தன்மையா??
அனைத்தையும் ரசிக்கும் மனிதனின் ரசனையா??
Saturday, December 15, 2007
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
கவிதை அருமை !
நன்றி சதங்கா!!!
Super!
Still try extend it with more comparisons.....
@Nelliyan,
Extend panna, bore adichiromnu bayanthaen.... Athaan niruthikkittaen....
Post a Comment