அனைவரிடமும்,
'என்னிடமிருந்து என்ன
வேண்டும்?' என்றேன்.
அம்மா, தலையில் குட்டி,
‘அன்பு' என்றாள்,
அன்புடன்.
ஐயா, முறைத்து பார்த்து,
‘பாசம்' என்றார்,
பாசத்துடன்.
ஆசிரியர், ஆணவத்துடன்,
‘மரியாதை' என்றார்,
வெறுப்புடன்.
மேலதிகாரி, கண்பார்த்து,
‘கடமை+மதிப்பு' என்றார்,
பொறுப்புடன்.
நண்பன், ஆரத்தழுவி,
‘நட்பு' என்றான்,
நட்புடன்.
உடன்பிறப்புகள், கேவலமாய் பார்த்து,
‘நேசம் + பயம்' என்றனர்,
அதிகாரத்துடன்.
காதலி, உதட்டளவில் கூட,
ஒட்டாத வார்த்தையை சொன்னாயே !
காதலுடன்.
காதலை காதலிக்காதவர்கள், இத்துடன் நிறுத்தி கொள்ளலாம்... உங்களுக்காக எழுதிய கவிதை, இத்துடன் நிறைவுறுகிறது..
காதலை காதலிப்பவர்களுக்கு தொடர்கிறது....
அழுவாய், அறைவாய், என நினைக்க,
அலைமகள் போல
சிரித்தாய்.
'காதல்' உடன் ‘காமம்' சேர்.
ஒன்றுக்கு பதிலாக இருமுறை,
ஒட்டும் உதடுகள்...
Monday, March 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment